|

ஆய்வின் போது கண்டறியப்பட்ட தேன் குடிக்கும் புதிய இனப் பறவை..!
Papua 'Eden' என்று அழைக்கத்தக்க மனிதர்களின் நடமாட்டத்தைக் கொண்டிராத ஒரு காட்டுப் பிரதேசத்தை அமெரிக்க,அவுஸ்திரேலிய, இந்தோனிசிய விஞ்ஞானிகள் கூட்டாக இணைந்து செய்த ஆய்வின் பின்னர் கண்டறிந்துள்ளனர். வட - மேல் பப்புவா-நியுகினியா (இந்தோனிசியா) பகுதியில் அமைந்துள்ள Foja மலைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியிலையே அந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது. மனித தாக்கம் இன்றி இன்றும் இயற்கை வனப்போடு இருக்கும் அந்த வனப்பகுதியில் வாழும் பல புதிய இன பறவைகளும் மற்றும் விலங்குகளும் தாவரங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
|